இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

     ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam  என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் தெரியும். அதை 'கிளிக்' செய்தால், 'செக் யுவர் இ.சி.எஸ்., ஸ்டேட்டஸ்' என்ற விபரம் வரும். அதில் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகம், ஓய்வூதிய கொடுப்பாணை எண் (பி.பி.ஓ.,), எந்த தேதி முதல் எந்தத் தேதி வரை என்பதை பூர்த்தி செய்தால், ஓய்வூதியரின் கணக்கில், எந்தெந்த தேதிகளில், எந்த வகையில் பணம் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது, என்ற விபரம் தெரியும். இதற்காக, கருவூலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இதில் 2013 செப்டம்பர் முதல் உள்ள விபரங்களை பெறலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி