தேர்வு பற்றிய பயமுறுத்தல் - குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள்

தேர்வில் தோல்வியடைந்தால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி கூறி, மாணவர்களை பயமுறுத்தும் செயலை ஆசிரியர்கள் மேற்கொள்ளக்கூடாது. இதனால், சாதகமான முடிவுகளுக்குப் பதிலாக, மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் நிலையே ஏற்படுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: பல ஆசிரியர்களுக்கு, தேர்வில் எப்படி சிறப்பாக செயல்படுவது என்பது குறித்தான ஆலோசனைகள் மற்றும் ஊக்கப்படுத்தல்களை, சரியான வழிமுறைகளில் மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் செயல்முறை தெரிவதில்லை. இதனால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படுகின்றன.


மொத்தம் 347 மாணவர்கள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் சராசரியாக 15 வயதுடையவர்கள். அவர்களில் 174 பேர் ஆண்கள். மொத்த மாணவர்கள், 2 பள்ளிகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.


இந்த ஆய்வின் மூலமாக, ஆசிரியர்களால், தேர்வு பற்றி அதிக பயமுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண்களையேப் பெறுகிறார்கள். அதேசமயம், அந்த நிலைக்கு உட்படாதவர்கள், அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி