கிராஜுவிட்டி என்றால் என்ன?

கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டு தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாக பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று.

கிராஜுவிட்டி பெறுவதற்கான தகுதி வருமான வரிச் சட்டத்தின் படி, ஊழியர் ஒருவர் நிறுவனம் ஒன்றில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ந்து முழுநேரப் பணியில் இருந்திருப்பாரானால், அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்பட வேண்டும்.

கிராஜுவிட்டி தொகை எப்போது வழங்கப்படும்? 

கிராஜுவிட்டி தொகை வழங்குவதற்கென சில விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. முதலில், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊழியர் பட்டியலில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருக்க வேண்டும். இப்பட்டியலில் இடம்பெறுவோர் தற்காலிக பணியாளர்களாக இருக்கக்கூடாது; அனைவரும் மாதாந்திர சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
5 வருடங்கள் 

குறிப்பிட்ட அந்நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும். எனினும், பணியில் இருக்கும் போதே ஒரு ஊழியர் மரணமடைய நேர்ந்தால், இந்த ஐந்து வருட காலம் என்ற விதிமுறை தளர்த்தப்படும். எனவே, அவ்வூழியரின் பணிக்காலம் 1 வருடம் என்ற அளவில் குறைவாகவே இருந்தாலும் கூட, முதலாவதாகக் கூறப்பட்ட விதிமுறை நிறைவேறும் பட்சத்தில் அவ்வூழியர் கிராஜுவிட்டி பெறும் தகுதியைப் பெறுவார்.

கிராஜுவிட்டிக்கு வரிக்கு உட்பட்டதா?? 

ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் கிராஜுவிட்டித் தொகை, ஊதியத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமாக, வருமான வரி ரிட்டர்ன்களை தாக்கல் செய்யும் போது "சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருவாய்" என்ற பிரிவின் கீழ் வரி விதிப்புக்குட்படுத்தப்படுகிறது.

அரசுப் பணியாளர் இதுவே அவ்வூழியர் அரசுப் பணியில் இருந்திருப்பாராயின், வருமான வரிச் சட்டத்தின் செக்க்ஷன் 10 (10) என்ற சட்டப்பிரிவின் கீழ், கிராஜுவிட்டியாக அவருக்கு வழங்கப்படும் தொகைக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அரசு ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகளே!

கிராஜுவிட்டியாக வழங்கப்படக்கூடிய தொகை கிராஜுவிட்டி தொகையானது, ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் நிறைவு செய்த ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் தலா 15 நாள் ஊதியம் என்ற அளவில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது (இங்கு ஊதியம் என்பது கடைசி 10 மாத பணிக்காலத்தின் போது பெறப்பட்ட சராசரி ஊதியம் என்பதாகக் கொள்ளப்படுகிறது).

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி