எம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோர்ட் உத்தரவு


ஏழு தனியார் கல்லூரிகளில், எம்.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர் கல்வி பல்கலை, ஒப்புதல் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.எட்., வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள், 2012, ஏப்ரல், 1ம் தேதிக்கு முன், தேசிய தர மதிப்பீட்டு குழுவிடம், சான்றிதழ் பெற இணையம் மூலம், விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், எட்டு மாதங்களாக இணையம் செயல்படாததால், கல்லூரிகளால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதற்கிடையில், கட் - ஆப் தேதிக்குள் விண்ணப்பிக்கவில்லை எனக்கூறி, எம்.எட்., வகுப்பில் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்றும், பி.எட்., வகுப்பில், கூடுதல் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்றும், ஆசிரியர் கல்வி பல்கலை உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், 2013-14ம் ஆண்டுக்கு, எம்.எட்., படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை, நீதிபதி டி.ராஜா விசாரித்து, பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் கல்வி பல்கலையின் உத்தரவுகள், ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களின் கல்லூரிகளில், 2013-14ம் ஆண்டில், எம்.எட்., வகுப்பில், மாணவர்கள் சேர்க்கைக்கு, பல்கலைகழகம் ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி