இதுகுறித்த செய்தி குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைதூர கல்வி மையம் சார்பில், எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., (ஐ.டி.,) படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in, www.unom.ac.in, www.kalvimalar.com உள்ளிட்ட இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், பல்கலை இணையதளத்தில் இருந்து அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஒரு தாளுக்கு, மறு மதிப்பீட்டிற்கு, 750 ரூபாய் கட்டணம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இம்மாதம் 11ம் தேதிக்குள் பல்கலைக்கு வந்து சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.