சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பொறுப்பேற்றார் - மாலைமலர் செய்தி


புதுடெல்லி, ஏப். 27 : சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து ராஜேந்திர மால் லோதா புதிய தலைமை நீதிபதிபதியாக நியமிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 41–வது தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மன்மோகன்சிங் உள்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். 

64 வயதான ஆர்.எம். லோதா 5 மாதங்களே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பார். செப்டம்பர் 27–ந்தேதி அவர் ஓய்வு பெறுகிறார். 

புதிய தலைமை நீதிபதியான அவர் 1949–ம் ஆண்டு செப்டம்பர் 28–ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தார். 1994–ம் ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தார். பின்னர் அங்கிருந்து மும்பை ஐகோர்ட்டு மாற்றப்பட்டார். 

2008–ம் ஆண்டு மே 13–ந்தேதி பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2008–ம் ஆண்டு டிசம்பர் 17–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியானார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி