மகாகவி சுப்பிரமணிய பாரதியார்


மீசை என்றாலும் முண்டாசு என்றாலும் அது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை தவிரவேறு யாரையும் நம் நினைவில் கொண்டுவராது. இது உலகம் அறிந்த செய்தி.இவரை முண்டாசு கவி என்றும் கூட அழைத்தார்கள்,

எனக்குத் தெரிந்த வகையில் தமிழ் இலக்கிய உலகில் 12 நூற்றாண்டில் வாழ்ந்த கம்பனுக்கு பிறகு19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20 நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த பாரதியே பெரும் புகழ் பெற்றவனாவான்..அதன் பிறகு கண்ணதாசன் வேண்டுமானால் இந்த புகழுக்கு ஈடாகலாம்.

கற்றவர்களில் சிறந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டு வந்த இலக்கிய நடைமுறையினை மாற்றி கல்லாதவரும் செவியால் கேட்டே புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியங்களை எழுதியவன்

அதை ஏற்று கொள்ளாத பழமைவாதிகள் இவரை பைத்தியம் என்று வர்ணித்தார்கள்.ஆனால் காலம் அந்த பைத்தியக்காரனைத்தான் மகாகவியாக மாற்றியது.மற்றவர்களை கணக்கிலே கூட எடுத்து கொல்லவில்லை.


அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே!

இது வெறும் பாடல் மட்டும் இல்லை, இதனை கேட்டவர்கள் மனதில் எல்லாம் வீரத்தினை வெறி கொண்டு எழச் செய்யும் பாடல்.
ஆண்டவனையும், அரசனையும் வாழ்த்தி பாடிய காலகட்டத்தில் தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! என முதலில் கவி பாடியவர் சுப்பிரமணிய பாரதி ஆவார்.

அக்கினி குஞ்சொன்று கண்டேன்...
அதை ஆங்கோர் மரத்திடை பொந்தினில் வைத்தேன்...
வெந்து தணிந்தது காடு...
தளிர் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டொ......

இந்த பாடல் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வீரத்தினை தூண்டக்கூடியது, அன்றைய காலக்கட்டத்தில் பாரதிக்கு இணையாக வேறு யாரும் அவ்வாறு பாடல்கள் எழுதியது இல்லை..

மக்களிடம் தேசிய உணர்வை தூண்டும் வகையில் தேசப் பாடல்கள் இவர் எழுதியதால் இவர் தேசிய கவியாகஅனைவராலும் போற்றப்பட்டார்.

'தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்'

இந்தியாவில் உள்ள தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் பாரதி எண்ணினான், அவன் வ்றுமையில் இருப்பது அவனால் பொறுக்க முடியாமல் குரல் கொடுத்தான்.

சாதிக்கு எதிராக “காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடினார்.

இவர் பாரதியார் என்றும்மகாகவி என்றும் அழைக்கப்பட்டார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி, பெண் விடுதலைக்காக பாடுப்பட்டவர், சாதி சம்பர்தாயத்தினை, மூடப் பழக்கத்தினை அறவே எதிர்த்தவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.

வாழ்க்கைக் வரலாறு :

இவர் முழு பெயர் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்பது. இவர் தந்தை சின்னசாமி ஐயர், தாயார் இலக்குமி அம்மாள்இந்த தம்பதிகளுக்கு மகனாக 20.12.1882-ல் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். 

இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன்எனினும் சுப்பையா என்று அழைக்கப்பட்டார்இவரின் தாயார் இலக்குமி அம்மாள் 1887ஆம் ஆண்டு மறைந்தார். அதனால் பாரதியார் தனது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது கவிபுனையும் ஆற்றலை அவர்வெளிப்படுத்தினார். இவருடைய கவித்திறனை பாராட்டி இவருக்கு பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

1897ஆம் ஆண்டு தனது 13ஆம் வயதில் செல்லம்மாளை மணந்தார்.  இவர் செய்துவந்த தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். இதனால் இவருக்கு எட்டயபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. ஆனால் அப்பணி பிடிக்காமல் சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசி 
பயணம் மேற்க்கொண்டார். 1898 முதல் 1902 வரை அங்கேயே தங்கியிருக்க. பின்னர் 

எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார்.1904 ஆம் ஆண்டு பாரதி மதுரையில் எழுதிய பாடல் 'விவேகபானு'இதழில் வெளியானது. அவர் வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதிக்கு தமிழ்ஆங்கிலம்இந்திசமற்கிருதம்வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்.

இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர்,   உ. வே. சாமிநாதையர்,  வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

பாரதியார் இறப்பு :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவரை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 11.09.1921-ல் மரணமடைந்தார்.

பாரதியார் இயற்றிய நூல் :

1)குயில் பாட்டு, 2) கண்ணன் பாட்டு,  3) ஞானப் பாடல்கள் , 4) தோத்திரப் பாடல்கள்,  5) விடுதலைப் பாடல்கள், 6பகவத் கீதை,7) தேசிய கீதங்கள்,  8)பகவத் கீதை,        9) பகவத் கீதை (பேருரை), 10) பாரதி அறுபத்தாறு,    11) விநாயகர் நான்மணிமாலை,       12) பதஞ்சலியோக சூத்திரம்
13) நவதந்திரக்கதைகள்,  14)  உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு,       
 15)  ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்),  16)  சின்னஞ்சிறு கிளியே17) ஞான ரதம்,18)  சந்திரிகையின் கதை,  19) பாஞ்சாலி சபதம்,  20)   புதிய ஆத்திசூடி,     21) பொன் வால் நரி,  22) சுயசரிதை,    23) ஆறில் ஒரு பங்கு

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு :

இந்திய சுதந்திரப் போரில்பாரதியின் பாடல்கள் உணர்ச்சி பொங்கும் வகயில்காட்டுத்தீ போன்றுதமிழ்நாட்டை விடுதலைக்காக வீறுகொள்ளச் செய்தது. பாரதியார்இந்திய பத்திரிக்கையின்” சுதந்திர பாடல்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் எழுதினார். 

இதனால் தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு மக்களிடம் கிடைத்தது, இதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து பாரதியாரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.

1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை மற்றும் ஆகஸ்ட் 1920முதல் செப்டம்பர் 1920 வரை பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதிவரை பணியாற்றினர்.

ஆகஸ்ட். 1905 ஆகஸ்ட். 1906 சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும்,
மே 1906 - செப்.1906புதுச்சேரி: 10.11.1908-17.05.1910, இந்தியா என்ற வார இதழில் 
பணியாற்றினார். இந்த "இந்தியா" பத்திரிகை புதுவை மாநிலத்தில் வெளியானது.
1910சூரியோதயம்
டிசம்பர் 1909-1910 கர்மயோகி,
பிப்.1910 தர்மம் என்ற இதழ்களிலும்
பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி