சென்னை பல்கலை இலவச கல்வி திட்டம்.

சென்னை பல்கலை இலவச கல்வித் திட்டத்தில், இளங்கலை பயில விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த, 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த செய்திக் குறிப்பு:இலவச கல்வித் திட்டத்தில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை பல்கலையின் இணைப்பு பெற்ற, சுயநிதி கல்லூரிகளில் சேர, விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

இம்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற, விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள்,விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு, திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விவரங்களும், விண்ணப்பமும். www.unom.ac.in இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, குறிப்பிட்ட சான்றிதழ்களுடன்,பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, 15 நாட்களுக்குள், பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி