கிராஜூவேட் ஆப்டிட்டியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் என்ற கேட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள், மற்ற பொறியியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பில் சேருவதற்கு மட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு சேருவதற்கு இந்த "கேட்" தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த வகையில் 2014ம் ஆண்டு "கேட்" தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த வருண் சவுத்ரி நாகினேரி என்ற மாணவர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் பிரிவில், அகில இந்திய அளவில் 7வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
வருண் சவுத்ரி நாகினேரி உட்பட கேட் ஃபோரம் பயிற்சி மையத்தில் பயின்ற 19 மாணவர்கள், வெவ்வேறு பிரிவுகளில் அகில இந்திய அளிவில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர். இந்த தேர்வில் மொத்தம், 8 லட்சத்து, 89 ஆயிரத்து 156 பேர் பங்கேற்றனர்.