ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் மே 3ம் தேதி?


CBSE அமைப்பால் நடத்தப்பட்டு வரும் JEE Main தேர்வின் முடிவுகள் வரும் மே 3ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்பட்ட பேப்பர் - பேனா அடிப்படையிலான தேர்வில் மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய ஆன்லைன் முறையிலான தேர்வு, ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. 

இத்தேர்வை மொத்தம் 5 லட்சம் வரையிலான மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் தேர்வு இரண்டு நேரங்களில் நடத்தப்படுகிறது. காலை 9.30 முதல் 12.30 வரை ஒன்றும், மதியம் 2 முதல் மாலை 5 மணிவரை ஒன்றுமாக இரண்டு நேரங்களில் நடத்தப்படுகிறது.மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், 50% மாணவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் வருபவர்கள். OBC பிரிவில் 4.7 லட்சம் மாணவர்களும், SC பிரிவில் 1.36 லட்சம் மாணவர்களும், ST பிரிவில் 57 மாணவர்களும் அடக்கம்.JEE Main தேர்வுக்கான ஆன்சர் கீ, ஏப்ரல் 25ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி