சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

மக்களவைத் தேர்தல் காரணமாக சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன ராவ் கூறினார்.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக ஒரு சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. இதன் காரணமாக, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வுகள் தாமதமாக முடிவடைவதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுமோ என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர். இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலரான சுதர்சன ராவிடம் கேட்டபோது,

""பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி தொடர்பாக புது தில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகம்தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்வுகள் தள்ளிவைப்பு காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமும் இருக்காது. வழக்கம் போல மே 3-ஆவது வாரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்'' என தெரிவித்தார்.

தமிழகத்தில் பி.இ. படிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி பெரும்பாலும் மே மூன்றாவது வாரத்தில் இருக்கும். பி.இ. விண்ணப்பத்தோடு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலையும் இணைக்க வேண்டியிருப்பதால், இவர்களின் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதிலும் சிக்கல் உள்ளது.

கடந்த ஆண்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை மே 30-ஆம் தேதி வரை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே போன்ற ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே சி.பி.எஸ்.இ. மாணவர்களால் பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி