ஏப்., 24ல் ஊதியத்துடன் விடுப்பு: அரசு உத்தரவு

"தனியார் நிறுவனங்கள், ஏப்., 24ம் தேதி ஓட்டுப் பதிவு அன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும்,வரும் 24ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. எனவே, 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, 135ன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள், தகவல் தொழில்நுட்பம் உட்பட வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், தேர்தல் நாளான, 24ம் தேதி,அவர்கள் ஓட்டுப்போட வசதியாக, ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அரசு உத்தரவிட்டுள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி