சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு, மே 21ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கும்.

தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 22ம் தேதிக்குள் வெளியிடப்படும்' என,தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், வரும், 28ம் தேதி தேர்வு நடத்தப்படும் என,அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக, மே 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு, 5,300 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி