2014, ஜுன் மாத நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?

2014ம் ஆண்டு ஜுன் மாத நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க இறுதி நாள் மே 5. ஜுன் மாதம் 29ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. JRF ஆராய்ச்சியாளர்கள் மற்றும்உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான நெட் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும்2 முறை தேசியளவில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நாடு முழுவதுமுள்ள பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி வாய்ந்தவர்கள். மொத்தம் 79 பாடங்களில், நாடெங்கிலுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட 86 கல்வி மையங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வை எழுத, முதுநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர் 50% பெற்றாலே போதுமானது.

தேர்வு கட்டணம்

பொதுப் பிரிவினருக்கு - ரூ.450O

BC பிரிவினருக்கு - ரூ.225

SC/ST/PWD பிரிவினருக்கு - ரூ.110

விரிவான விபரங்களுக்கு : http://www.ugcnetonline.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி