சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக, இம்மாதம் இறுதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 1ல் துவங்கியது. 10ம் வகுப்பு தேர்வு மட்டும், ஏற்கனவே திட்டமிட்டபடி, கடந்த மாதம், 19ம் தேதியுடன் முடிந்துவிட்டது. பிளஸ் 2 தேர்வு, ஏப்., 17ம் தேதி வரை நடப்பதாக, ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்தல் காரணமாக, 30 பாடங்களுக்கான தேர்வுகள், இம்மாதம், 19, 21, 22, 25 ஆகிய தேதிகளுக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷர்மா அறிவித்து உள்ளார். உருது விருப்பப்பாடம் உள்ளிட்ட, எட்டு தேர்வுகள், ஏப்., 9க்குப் பதில், 25ம் தேதி நடக்கிறது; ஏப்., 10ம் தேதி நடக்க இருந்த, சமூக அறிவியல் உள்ளிட்ட, நான்கு தேர்வுகள், 21ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளது; 12ம் தேதி நடக்க இருந்த, தத்துவவியல் உள்ளிட்ட தேர்வுகள், 19ம் தேதிக்கும்; 17ம் தேதி நடக்க இருந்த, வேளாண்மை, ஓவியம், "கிராபிக்ஸ்' உள்ளிட்ட தேர்வுகள், 22ம் தேதிக்கும், தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி