குரூப்-2-ஏ பணிகளில் மேலும் 577 காலியிடங்கள் சேர்ப்பு: விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம்

குரூப்-2-ஏ பணிகளில் மேலும் 577 காலியிடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.

பள்ளிக் கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, போலீஸ், வணிகவரி, தொழிலாளர் நலன் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களையும், சட்டசபை கீழ்நிலை எழுத்தர், டிஎன்பிஎஸ்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங் களையும் நிரப்புவதற்காக குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த பதவிகள் அனைத்தும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களாக கருதப்படுகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட பதவிகளில் 2,269 காலியிடங் களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, தேர்தல் காரணமாக மே 18-ம் தேதி நடத்தப்பட இருந்த தேர்வு, ஜூன் 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
புதிதாக 577 பணியிடங்கள் சேர்ப்பு
இந்த நிலையில், கணக்கு கருவூலத்துறையில் 469 கணக்கர் பணியிடங்களையும், வனத்துறையில் 108 உதவியாளர் இடங்களையும் (மொத்தம் 577) நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது.
தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதாவது பட்டப் படிப்பு என்ற போதிலும் கருவூல கணக்காளர் பணிக்கு பி.காம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கெனவே குரூப்-2-ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பணிக்கென புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. புதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
ஏப்.30 கடைசி நாள்
ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30-ம் தேதி ஆகும். விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவற்றை மே 2-ம் தேதி வரை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் செலான் மூலம் செலுத்தலாம் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி