இன்று (1935) ஏப்ரல் 1: ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம்

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி எழுபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது இன்று தான் .சட்ட வல்லுனராக நம்மில் பலரால் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் தான் இந்த வங்கி உருவாவதற்கு காரணம் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

உலக போர் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஒரு தனி வங்கியை இந்தியாவுக்கு என்று துவங்க வேண்டும் என ஆங்கிலேய அரசு யோசித்து அதற்கான ஹில்டன் எங் குழுவை அமைத்தது. அக்குழுவின் உறுப்பினர்கள் எல்லாரின் கையிலும் இருந்த நூல் அண்ணல் அம்பேத்கர் எழுதிய The Problem of the Rupee – It’s origin and it’s solution எனும் நூல்.


அதன் வழிக்காட்டுதலில் ரிசர்வ் வங்கி உருவானது .முதலில் கொல்கத்தாவில் தலைமையகம் அமைக்கப்பட்டு பின் மும்பைக்கு மாற்றப்பட்டது .தனியார் பங்குகளை கொண்டு இயங்கிக்கொண்டிருந்த அமைப்பு விடுதலைக்கு பின் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்தது.
நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது இந்த வங்கியே .தனி நபர்கள் இதில் கணக்கு வைக்க முடியாது .பர்மாவுக்கும் விடுதலைக்கு முன் வரை மத்திய வங்கியாக இதுவே செயல்பட்டது ;பாகிஸ்தானுக்கு கூட விடுதலைக்கு பின் பத்து மாதம் வரை வங்கியாக செயல்பட்டது.
இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவதில்உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.....


ஏப்ரல் 1 ஒரு நாட்டையே பசுமையாக மாற்றிய  வங்காரி மாத்தாய் எனும் ஆப்ரிக்க மர (மரம்) அன்னை பிறந்தநாள் இன்று 


அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க கென்யாவில் இருந்து கிளம்பி செல்லும் பொழுது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர் தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு வந்தார் .
மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற ஆவல் உந்தித்தள்ளியது .மூன்றில் ஒரு பங்கு காடுகள் ஒரு காலத்தில் கென்யா முழுக்க போர்த்தி இருந்தன .நிலைமை இவர் வந்த பொழுது தலைகீழ் மூன்று சதவிகிதத்துக்கு போயிருந்தது . பெண்கள் தேசிய இயக்கத்தில் சேர்ந்த இவர் கிரீன் பெல்ட் இயக்கத்தை ஆரம்பித்தார் .
மரத்தை வெட்டினால் பணம் என அரசாங்கம் சொன்ன பொழுது மரத்தை நட்டால் பணம் என முழங்கினார் .மக்களின் வீடுகளுக்கு போய் பேசினார் ;பெண்களை தன் பின்னே அணிவகுக்க செய்தார் வனத்துறை உதவியது . ஒரு வீட்டில் கணவன் மனைவி என இரண்டு கன்றுகள் என ஆரமபித்த இயக்கம் இருபத்தைந்து ஆண்டுகளில் நான்கு கோடியே முப்பது லட்சம் கன்றுகளை நாட்டு பெரும்பாலும் அவை பராமரிக்கப்பட்டு பசுமைக்கோலம் பூண்டது நாடு
அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு 2004 இல் வழங்கப்பட்டது .அவரின் செயல்களை இரண்டாவது விடுதலைப்போர் என வர்ணிக்கிற அளவுக்கு சாதித்த மரங்களோடு மந்தகாச மொழி பேசிய அவரின் பிறந்தநாள் இன்று

மேலும் இதே நாளுடன் தொடர்புடைய சில நிகழ்வுகள்.....


1935 இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.


1957 இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1973 புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.

1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniakஆகியோரால் தொடங்கப்பட்டது.

2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற முற்றிலும் இலவசமான மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி