தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய மே 16–ந்தேதி கடைசி நாள்

தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தபால் ஓட்டு போட மே 16–ந் தேதி கடைசி நாளாகும்.

தபால் ஓட்டு

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு கடந்த 24–ந் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், போலீசார் மற்றும் பணியாளர்கள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போட ஏற்கனவே விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் ஓட்டு சீட்டுகளை பெற்று தபால் ஓட்டுகளை போட்டு வருகின்றனர்.

தபால் ஓட்டுகளை பதிவு செய்ய கலெக்டர் அலுவலகத்திலும், அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும், தாசில்தார் அலுவலகங்களிலும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு முன் கூட்டியே தபால் ஓட்டுகளை பதிவு செய்ய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் போலீசார் ஓட்டு போட்டனர்.

மே 16–ந் தி கடைசி நாள்


இந்த நிலையில் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய ஓட்டு சீட்டு பெற்று வாக்களிக்காமல் இருந்தவர்கள் தபால் மூலமாகவோ, நேரடியாகவோ ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். தபால் ஓட்டுகளை மே மாதம் 16–ந்தேதி காலை 7 மணி வரை பதிவு செய்யலாம். அதன் பிறகு காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி