தமிழகத்தில் தேர்தலையொட்டி 36 மணி நேர 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். தடை உத்தரவு காரணமாக 5 பேருக்கு மேல் கூட்டமாக கூடக் கூடாது. வன்முறை, பணப் பட்டுவாடாவை தடுக்க ஏதுவாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.