பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 வியாழக்கிழமை தொடங்குகிறது.வரும் 19-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 வியாழக்கிழமை தொடங்குகிறது.


பத்தாம் வகுப்புத் தேர்வு சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் ஏப்ரல் 9 புதன்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்களில் விடைத்தாள் மதிப்பீடு வியாழக்கிழமை தொடங்குகிறது. வரும் 19-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது.


பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்தத் தேர்வை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 23-ஆம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி