வாக்காளர் பட்டியலில் திருநங்கைகளுக்கு தனி பாலினம்: தேர்தல் ஆணையம் உறுதி

வாக்காளர் பட்டியலில் திருநங்கைகள் பெயர் சேர்ப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

இது குறித்து, புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்துள்ள திருநங்கைகள் பலரும், தங்களது பாலினத்தை பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும், தங்களை தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்களும் என்னை வந்து சந்தித்தனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக, தேர்தல் முடிந்த பிறகு திருநங்கைகளை அழைத்து ஆலோசனை நடத்துவோம். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
கோயில் திருவிழாக்கள்: மாநிலத்தில் கோயில் திருவிழாக்களை நடத்த எந்தத் தடையும் இல்லை. ஆனால், இந்த விழாக்களில் அரசியல் கட்சியினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கக் கூடாது. போஸ்டர்கள், பேனர்கள் வைக்கக்கூடாது.
தேர்தல் பிரசாரம் செய்வது போன்று திருவிழாக்கள் நடத்தப்பட்டால் அது குற்றமாகும் என்றார் பிரவீண்குமார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி