மாறிவரும் உலகம் - பரிணமிக்கும் புதிய பணி வாய்ப்புகள்

மாறிவரும் காலகட்டம், பல பழைய தொழில் துறைகளையும், புதிய பணி வாய்ப்புகளை வழங்கும் புத்தாக்கத் துறைகளாக மாற்றி வருகிறது. அந்த வகையில், புதிய யுகத்தின் பணி வாய்ப்புகளை வழங்கும் சில பழைய துறைகளை இங்கு அலசலாம்.

வங்கியியல்(Banking)
புதிய உரிமங்களால், வங்கியியல் துறை, இன்றைய காலகட்டத்தில், புதிதாக படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள் முதல், அனுபவம் பெற்ற மூத்த நபர்கள் வரை அனைவருக்கும் ஏராளமான வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக உள்ளது.

சில்லறை வர்த்தக வங்கியியல்(Retail banking), ஆன்லைன் வங்கியியல் மற்றும் அதுதொடர்பான துணைநிலை சேவைகளுக்கு, புத்தாக்க முயற்சிகளில் கவனம் செலுத்தும் நபர்கள் தேவைப்படுகிறார்கள். வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது என்ற செயல்திட்டமானது, வெவ்வேறு விதமான புராடக்ட் மற்றும் சேவைகளை உருவாக்குவதால், போட்டியிடுவதற்குரிய திறனுள்ள மற்றும் திறமையும், அறிவும் கொண்ட ஆட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

பாதி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில், இத்துறை சார்ந்து நல்ல வாய்ப்புகள் இருப்பதால், நிபுணர்கள் அதற்கு தயாராக இருந்து, தங்களுக்கான சிறப்பான இடத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
இத்துறையில், தற்போது பெரியளவில் வளர்ந்துவரும் பிரிவுகள் யாதெனில், ஆன்லைன் பேங்கிங், பாரன்சிக் அக்கவுன்டிங் மற்றும் போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் போன்றவைதான் அவை.

உள்கட்டமைப்பு
உலகமயமாக்கல், வாழ்வின் சர்வ அம்சங்களையும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஒரு நாட்டில் நல்ல சாலைகள், சிறப்பான போக்குவரத்து வசதிகள், வசதி மிகுந்த தங்குமிடம் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவை அவசியமாகின்றன. இதன் விளைவாக, இத்துறையில் திறன்சார் மற்றும் திறன்சாராத பணியாளர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இத்தேவைகள் முதல்நிலை நகரங்களில் மட்டும்தான் என்றில்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் கூட இந்த நிலைதான். மேலும், இன்றைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புத்தாக்க நடைமுறைகளால், ஒரு கட்டுமான பணியை திட்டமிடப்பட்ட காலகட்டத்திற்குள் விரைவாக முடிக்க முடிவதோடு, சுற்றுச்சூழல் மாசடையாதவாறும் செயல்படும் சாத்தியம் ஏற்படுகிறது.
உள்கட்டுமானத் துறைக்கு, தற்போதைய நிலையில், பராமரிப்பு, கட்டடம் மற்றும் கட்டுமானம், பொறியியல் மற்றும் கட்டடக்கலை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.

மருத்துவத் துறை
சுகாதாரமற்ற நகர்ப்புற வாழ்க்கை முறை நமக்கு பல்வேறான நோய்களைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. எனவே, அவற்றுக்கு சரியான முறையில் சிகிச்சையளித்து, தேவைப்படும் புதிய மருந்துகளைக் கண்டறிந்து குணப்படுத்தும் திறன்பெற்ற மருத்துவ நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது.

இத்துறையில், core பணி வாய்ப்புகள் தவிர, மருத்துவமனை நிர்வாகம் தொடர்பான பணிகளும் உள்ளன. இந்தியாவில் வளர்ந்துவரும் மருத்துவ சுற்றுலாத் துறை, தன் பங்கிற்கு அதிகளவிலான மருத்துவ துறைசார் நிபுணர்களுக்கு பணி வாய்ப்புகளை அளிக்கிறது.

சில்லறை வணிகம்
இந்தியர்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க அளவிலான உயர்வு, அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களின் நுகர்வு கலாச்சாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மக்களின் புதிய வாழ்க்கை முறையால், அவர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன.

இதன் விளைவாக, சில்லறை வர்த்தகத் துறை பெரியளவில் வளர்ச்சி கண்டு, அதற்கான மனிதவளத் தேவையும் அதிகரித்துள்ளது. பிரான்ட் அல்லது புராடக்ட் தொடங்கி, சேவை மேலாண்மை வரை, பணி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சிறப்பான சரக்கு கையாளும் திறன், சப்ளை - செயின் மேனேஜ்மென்ட் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் திறன் பெற்றவர்கள் சில்லறை வர்த்தக நிறுவனங்களால் விரும்பப்படுகிறார்கள். மேலும், இத்துறையில் பணியாற்றும் ஒரு நிபுணர், பலவேறான பிரிவுகளில் செயல்புரியும் சுதந்திரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளிக்கின்றன. மனிதவளத்தின் தேவை அதிகரித்துள்ளதால்தான், பல வணிகப் பள்ளிகள் சில்லறை வர்த்தக மேலாண்மைத் தொடர்பான படிப்புகளை வழங்குவதில் ஆர்வம் செலுத்துகின்றன.

ஆன்லைன் தொழில்நுட்பம்
தகவல்களும், டேட்டா பகுப்பாய்வும் ஒரு வணிகத்தின் வெற்றிக்கு அடித்தளமாய் இருக்கும் இந்த யுகத்தில், வணிக பகுப்பாய்வு மற்றும் பெரிய டேட்டா ஆகியவை, நிபுணத்துவம் பெற்ற ஆட்களுக்கு அதிகளவு பணி வாய்ப்புகளை அளிக்கின்றன.

பல்வேறு செயல்பாடுகளில், டேட்டாவை விளக்கி, தீர்வுகளை முன்வைக்கும் நபர்களுக்கான தேவை மிகவும் அதிகம். தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், திட்டங்கள், இலக்குகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணிகள் நிறைந்துள்ளன.

Blogging, content writing, e-business, medical transcription, e-healthcare and designing ஆகிய அம்சங்களில் நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கு மேற்கண்ட பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. இத்துறையில், Search Engine optimisation(SEO) and Social media optimisation(SMO) போன்ற சில புதிய காலகட்டத்திற்கான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

நம் கையில்...
இந்த புதிய முதலாளித்துவ மற்றும் தொழில்நுட்ப காலகட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் புதிய புதிய பணி வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே உள்ளன. கடின உழைப்பு, புதிய விஷயங்களை அறிதல், நகர்வு, சூழலுக்கேற்ப மாறுதல், தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் உள்ளிட்டவற்றில் ஒருவருக்கு இருக்கும் அதீத ஆர்வம் மற்றும் செயல்பாட்டுத் திறன், இந்த வணிக உலகில் அவருக்கான வெற்றியைத் தீர்மானிக்கும்.

புதிய யுகத்தின் பணி வாய்ப்புகளை அள்ளித்தரும் இதர சில துறைகள்
* பொறியியல்
* விருந்தோம்பல்
* மீடியா
* கல்வி
* மேலாண்மை
* டிசைன்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி