தேர்தலில் நோட்டவுக்கு தனிச்சின்னம் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சின்னம் மக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்யவும் வழக்கறிஞர் சத்யசந்திரன் மனு தாக்கல் செய்தார். சத்யசந்திரன் வேண்டுகோளை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது என்று தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பதில் தெரிவித்தார். நோட்டாவுக்கு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் விளம்பரமும் செய்து வருகிறது என்றும் அவர் வாதாடினார். நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் பதில் தர தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.