போலியோ இல்லாத நாடாக இந்தியா


போலியோ இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை அறிவித்தது.இதன் மூலம் உலக சுகாதார அமைப்பால் தென்கிழக்கு ஆசியப்பிராந்தியத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 11வது நாடுஇந்தியாவாகும்.

இதற்கான சான்றிதழை புதுதில்லியில் வியாழக்கிழமைநடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின்அதிகாரிகளிடம் இருந்து இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத் பெற்றுக் கொண்டார்.


இதுகுறித்து குலாம் நபி ஆஸாத் கூறியதாவது: இந்தியாவில் கடந்த2011ஆம் ஆண்டு முதல் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டது.இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டகுழந்தைகள் போலியாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது கடந்த1995ஆம் ஆண்டு போலியோவை முழுவதுமாக ஒழிக்கும் திட்டம்தொடங்கப்பட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து,இந்தத் திட்டத்திற்காக அரசு நிதி ஒதுக்கியது, திட்டத்துக்கான தீவிரகண்காணிப்பு மற்றும் உயர் அதிகாரிகளின் அயராத முயற்சிபோன்றவை காரணமாக இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

போலியோவை ஒழிக்க 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக்கொண்ட குழுக்களும், 1,50,000 கண்காணிப்பாளர்களும் இரவுபகலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும்சென்றடைந்துள்ளனர் என்றார் குலாம் நபி ஆஸாத்.

மேலும் போலியோ ஒழிப்பில் அரசுடன் இணைந்து பாடுபட்ட உலகசுகாதார அமைப்பு, யுனிசெஃப், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி