தபால் கிளர்க் பணி: "சர்வர்" முடங்கியதால் திண்டாட்டம்

தபால் கிளர்க் பணிக்கு,"ஆன்-லைனில்" விண்ணப்பிக்க, இறுதி நாளான நேற்று, "சர்வர்" முடங்கியதால் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தவித்தனர்.

இந்திய தபால் துறைக்கு, 22 கோட்ட அலுவலகங்களில் எழுத்தாளர்கள், கடித போக்குவரத்து, பண பரிவர்த்தனை ஆகிய செயல்பாடுகளுக்காக, 8,243 தபால் கிளர்க் காலி பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில், 1,023 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கிளர்க் தேர்வுக்கு, பிப்., 26ம் தேதி முதல், இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது; இறுதி நாள், நேற்றுடன் முடிந்தது.இந்நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்து, தபால் துறைக்கான சர்வர் முடங்கியதால் தமிழகம் முழுவதும் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. தேர்விற்கு விண்ணப்பிக்க இறுதி நாளை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் இரவுவரை, 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் ஆன்-லைன் வசதியைப் பயன்படுத்தும் போது, சர்வரில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். தலைமை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளோம். தேர்வு நாளை நீட்டிப்பது குறித்து, உயர்அதிகாரிகள் முடிவு செய்வர். இவ்வாறு, அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி