பொறியியல் கல்லூரியில் சேர மே முதல் விண்ணப்பம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மே மாதம் பத்தாம் தேதிக்குள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு, விண்ணப்ப விநியோகம் தொடங்கும் உறுதியானதேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஜூன் மூன்றாம் வாரத்தில் கலந்தாய்வுகள் தொடங்கி ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு முடிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆகஸ்ட் 1ம் தேதி இந்தக் கல்வியாண்டிற்கான பொறியியல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி