மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்

தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் வரும் நிதியாண்டிலும் (2014-15) தொடர்ந்து பலன் அடைய தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர்டி.சீனிவாசன் கூறியதாவது: 

மாற்றுத் திறனாளிகள் இப்போது பயன்படுத்தி வரும் இலவச பஸ் பயணஅட்டை வரும் 31-ஆம் தேதி காலாவதியாகிறது. தேர்தல்நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசபஸ் பயண அட்டையை வரும் நிதியாண்டுக்கு (ஏப்ரல் 1 முதல்)புதுப்பிப்பது தொடர்பாகமாற்றுத் திறனாளி நல ஆணையருக்கு அனுமதிக்கடிதம் அனுப்பினேன். திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அவர்கூறினார்.இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 100 மாற்றுத்திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையைப் புதுப்பிக்க பரிந்துரைக் கடிதம் பெற்றுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி