தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள, அலுவலர்கள் விதிமுறைகள் அனைத்தையும் அறிந்து கொள்வது அவசியம்: மாவட்ட ஆட்சியர்

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள, அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடுநிலையாக பணியாற்ற வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியரும், நாகை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடராசன்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் தலைமை பயிற்றுனர்கள் வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றுவது குறித்து நடைபெற்ற மாதிரி வாக்குச்சாவடி பயி ற்சி வகுப்பில் மேலும் அவர் பேசியது:
வாக்குச் சாவடியில் பணியாற்றவுள்ள அலுவலர்கள் தங்கள் பணியாற்றும் பகுதிகள், அங்கு உரிய நேரத்தில் சென்று சேர வழித்தடங்கள் உள்ளிட்ட தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் போது எவ்வித சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் தேர்தலை நடத்தும் வகையில், தேர்தல் நடத்தை விதிகள் வேட்பு மனுத் தாக்கலிருந்து வாக்குப்பதிவு நிறைவடைந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உரிய அலுவலரிடம் ஒப்படைக்கும் வரை உள்ள விதிகளை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிப்படுத்திக் கொள்ளவதுடன், தேர்தல் பணியில் பிரச்னை இருப்பின் உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து சரிசெய்து கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் அனைவரும் விழிப்புடன், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு தேர்தலை நடத்த வேண்டுமென்றார் நடராசன்.

மாதிரி வாக்குப் பதிவு:
உண்மையான வாக்குச்சாவடியில் என்ன இருக்கும், அங்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் தத்ரூபமாக தேர்தல் அலுவலர்கள் செய்து காண்பித்தனர். ஆட்சியர் அலுவலக மேடை வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் அலுவலர்கள் தங்களுக்குரிய வாக்குசாவடிக்கு வாக்குப்பதிவுக்கு முதல் நாளே வந்து வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள், வாக்காளர்களின் விவரப் பட்டியல்கள் சரிபார்த்து யார் எங்கு அமர வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் எங்கு அமைக்க வேண்டும், வாக்குப்பதிவு நாளன்று முதலாவதாக உறுதிமொழியொ அடுத்து செய்ய வேண்டிய வழக்கமான பணியை செய்து காண்பித்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் கவனிக்க வேண்டியவை, நுண்ணின பார்வையாளர் வரும் போது செய்யும் பணி, பதட்டமான வாக்குச்சாவடியெனில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும், அதை எவ்வாறு கையாள்வது போன்றவைகள் மாதிரியாக செய்து காண்பிக்கப்பட்டது.இருவாக்குகள் பதிவு செய்யலாம்: ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

யார் மூலம் (மனைவி அல்லது குடும்பத்தினர்) தனது வாக்கைப் பதிவு செய்ய விண்ணப்பித்தாரா அவர் முதலில் அவருடையை வாக்கைப் பதிவு செய்து விட்டு மீண்டும் வந்து ராணு வவீரரின் வாக்கைப் பதிவு செய்யலாம். இவ்வாக்கை எப்படி பதிவு செய்ய வேண்டுமென்று மாதிரி வாக்குப் பதிவில் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் விளையாட்டு வீரரி ன் தொடர் முயற்யில் தோல்வி, பூனை சிங்கமாக கர்ஜிப்பது உள்ளிட்ட துணைக் கதைகள் மூலம் தேர்தல் அலுவலர்களின் பணி குறித்து விளக்கிக்கூறினார் ஆட்சியர் நடராசன்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி