பொது தேர்வுகளில் "ஜெல்' பேனா பயன்படுத்தலாமா?


பொது தேர்வுகளில், "ஜெல்' பேனாவை பயன்படுத்தலாம்' என, கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது. பொது தேர்வுகளில், விடை எழுத, பெரும்பாலான மாணவ, மாணவியர், நீல நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர். சிலர், கறுப்பு நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர்.


இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பச்சை, சிவப்பு மற்றும் ரோஸ் நிற மை மற்றும், "ஜெல்' பேனாக்களை மட்டும் பயன்படுத்தக்கூடாது. மற்றபடி, "நீல, கறுப்பு நிற மை பேனாக்களையும், அந்த நிறத்தில் உள்ள, "ஜெல்' பேனாக்களையும், விடை எழுத பயன்படுத்தலாம். பொதுவாக, முக்கியமான கருத்துக்களை, அடிக்கோடு இடுவதற்குத் தான், கறுப்பு நிற, மை பேனாவை, மாணவர் பயன்படுத்துகின்றனர்; இதில், தவறில்லை. முக்கிய பகுதி, எடுப்பாகவும் தெரியும். இதர விடைகளை எழுத, நீல நிற மை பேனா அல்லது, "ஜெல்' பேனாவை பயன்படுத்துவது சிறந்தது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

இத்துடன், "ஜெல்' பேனாவை பயன்படுத்தலாமா என்ற குழப்பம், மாணவர் மத்தியில் நிலவுகிறது.
தேர்வுத்துறை அலுவலர்களும், இதே கருத்துக்களை தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி