தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரிக்கு குழந்தைகள் மனித உரிமைக்குழு கடிதம்

தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என தலைமை தேர்தல் அதிகாரிக்கு குழந்தைகள் மனித உரிமைக்குழு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் தேதிகள் நெருங்கி வருகின்றன. அதேபோல், பள்ளித் தேர்வுகளும் முடிவடைந்து விடுமுறை விடப்பட இருக்கிறது. எனவே கட்சிகள் குழந்தைகளைத் தேர்தல் பணிகளில் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். போஸ்டர் ஒட்டுவது, பிரச்சார கோஷம் இடச் செய்வது, தலைவர்கள் போன்ற முகமூடி அணியச் செய்து வலம் வர வைப்பது, நோட்டீஸ் கொடுப்பது என குழந்தைகளை கட்சிகள் துன்புறுத்தாமல் இருக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது குழந்தைகள் மனித உரிமைக்குழு. மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் சில அரசியல் கட்சிகள் குழந்தைகளை வைத்து தேர்தல் பிரச்சராரத்தில் ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், அதனாலேயே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக மகாராஷ்டிர குழந்தைகள் மனித உரிமை குழு தலைவர் திரிபாதி கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது :- 

அரசியல் கட்சிகள் குழந்தைகளை துண்டுபிரச்சாரங்களில் ஈடுபடுத்துவதும்,பேரணியில் ஈடுபட வைப்பதும், சில அரசியல் கட்சிகள் குழந்தைகளை வைத்து தேர்தல் பிரச்சராரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவைப்பது இது ஒரு உடல்ரீதியான துன்பத்த்தை கொடுப்பது ஆகும். குழந்தைகள் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி