பஸ்களில் பயணிகளுக்கு இடையூறாக செல்போனில் பாடல்கள் கேட்பதை தடுக்க ஆர்.டி.ஓ. நடவடிக்கை

இன்றுள்ள இன்டர்நெட் காலத்தில் 100க்கு 99.99 சதவீதம் பேர் செல்போன் களை பயன்படுத்துகின்றனர். ஆரம்ப காலத்தில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட செல்போன்கள் இன்று முகம்பார்த்து பேசுவதற்கு மட்டுமல்லாமல், பாடல்களை கேட்கவும், படம் பார்க்கவும், வீடியோ கேம் விளையாடவும் பயன்படுகின்றன. சாதாரண செல்போன்களில் கூட மெமரி கார்டுகளை போட்டு பாடல் கேட்கும், படம் பார்க்கும் வசதிகளும் உள்ளன. தற்போது செல்போன்களை உபயோகப்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை பேசுவதற்கு பயன்படுத்துகின்றனரோ இல்லையோ பாடல்களை கேட்க அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

வேலை செய்யும் இடங்களில் மட்டுமல்லாமல் பஸ், ரயில் போன்றவற்றில் பயணிக்கும் நேரத்திலும் பலர் செல்போன்களில் சத்தமாக பாடல்களை கேட்டபடி பயணிக்கின்ற னர். பஸ், ரயில்களில் பயணிக்கும் சிலர் செல்போன்களில் சத்தமாக பாட்டு கேட்டபடி பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்களால் தன்னோடு பயணிப்பவர்களுக்கு இடையூறாக இருக்குமே என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கண்டுகொள்வது இல்லை. இதுபோன்று சத்தமாக பாடல் கேட்பவர்களால் வயதானவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், அமைதியை விரும்புவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மேலும் பாடல்கள் மூலம் பெண்களை கேலி செய்வதும், போட்டி போட்டு பாடல்களை கேட்பதும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது.

எனவே, பஸ்களில் செல்போன்களில் பிறருக்கு இடையூறாக பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும் காவல்துறையினர் தடை விதிக்கவேண்டும் என்று தினகரன் நாளிதழில் செய்திகள் வெளியானது. இதனை சுட்டிக்காட்டி பயணிகளுக்கு இடையூறாக செல்போன்களில் பாடல் கேட்பதற்கு தடைவிதிக்க கோரி புதுக்கோட்டை வின்பவர் டிரஸ்ட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திமதிநாதன் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் மூலமாக கடிதம் அனுப்பினார். இதனையடுத்து, மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்களில் 'செல்போன்களில் பிறருக்கு இடையூறாக சத்த மாக பாடல் கேட்கக்கூடாது மீறினால் காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்பது போன்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகையினை வைத்து கண்காணித்திடவேண்டும் என்று தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி