இந்தாண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும்: வானியலாளர்கள் கருத்து

பகல் நேரம் அதிகரிப்பாலும், மழை பெய்யாததாலும், இந்தாண்டு கோடை வெப்பம், கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டில் வடகிழக்கு, தென் மேற்கு பருவ மழைகள் பொய்த்தன; இந்தாண்டும், இதே நிகழ்வு தான் பதிவாகியுள்ளது. இதன் விளைவு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.


வானியலாளர்கள் கணிப்பு : இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு, கோடை வெப்பம் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக, வானியலாளர்கள் கணித்துள்ளனர். இரவு மற்றும் பகல் நேரம் குறித்த ஆய்வில், இது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. சூரியனின் வட்டப் பாதையில், தமிழகத்தின் மீது சூரியன் வரும் போது, 
உச்சபட்ச வெப்பநிலை பதிவாகும். அப்போது தான், "கத்தரி' வெயில், அதாவது அக்னி நட்சத்திர காலம் வருகிறது. இம்முறை, "கத்தரி' வெயில் காலம், மே 4ம் தேதி முதல், 28ம் தேதி வரை இருக்கும். இதில், உச்சபட்ச வெப்ப காலம், மே 13ம் தேதி வருகிறது. தமிழகத்தில் தற்போது, அதிகாலையில் பனிமூட்டமும், பகல், 12:00 மணிக்கு சுட்டெரிக்கும் வெயிலும் நிலவி வருகிறது. தொடர்ந்து, நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு, அதிகபட்சமாக, 35 டிகிரி, குறைந்தபட்சம், 25 டிகிரி 
செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டை விட...: வெப்பநிலை அதிகரிப்பு குறித்து, தமிழ்நாடு வானியலாளர் கழகத்தின் தலைவர், விஜயகுமார் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்துள்ளது. வெப்பநிலை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால், இனி வரும் காலங்களில், காற்றும் அனலாக தான் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் உதிக்கும் நேரம் மற்றும் அஸ்தமிக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு, பகல் பொழுது அதிகரிக்கிறது. இதன் காரணமாக, கடந்தாண்டை விட, வெயில் 
இந்தாண்டு அதிகமாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி