திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி கனிமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 12ம் வகுப்பு படிக்காமல் டிகிரியை திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் படித்து முடித்தேன். பின்னர் பட்டமேற் படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அதன்பிறகு முழு கல்வி தகுதி பெற பிளஸ் 2 தனியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். அதன்பிறகு ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று எழுத்து தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி வழங்க அரசு மறுத்து விட்டது.

எனவே எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து, மனுதாரர் உரிய கல்வித்தகுதி பெற்றுள்ளார். அவர் எப்படி படித்தார் என்று கணக்கில் எடுத்துக்கொண்டது தவறானது. எனவே அவரது கல்வி தகுதியை கருத்தில் கொண்டு பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி