திருவள்ளுவரும் திருக்குறளும்

TNPSC Group 2, VAO தேர்விற்கான பாடக் குறிப்புகள் 


6.ம் வகுப்பில் அடுத்த பாடம் திருக்குறள்.6

திருக்குறளில் 133 அதிகாரங்கள் இருந்தாலும் அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவுஅறிதல், செய்நன்றி, சாறாண்மை, பெரியாரைத் துணைகோடல், பொருள் செயல் வகை,  இனியத் திட்பம் போன்ற 19 அதிகாரங்களில் இருந்து மட்டுமே அதிக வினாக்கள் இடம் பெரும். எனவே இந்த 19 அதிகாரங்கள் குறித்த அருஞ்சொற் பொருள்,வேர்சொல், குறிப்பிட்ட குறளில் பயின்று வந்துள்ள அணிகள்,இலக்கண குறிப்பு,அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் செய்திகள் போன்றவற்றை படிக்கலாம்.

திருவள்ளுவர், திருக்குறளுக்கு வழங்கப் படும் வேறு பெயர்கள், திருக்குறளுக்கு உரை கண்டவர்கள்,திருக்குறளை போற்றி எழுதப்பட்டுள்ள திருவள்ளுவமாலை நூலை பற்றிய விளக்கம், திருவள்ளுவமாலையில் உள்ள பாடகள்,அதனை இயற்றிவர்கள் குறித்து காணலாம்

திருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு. திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 

இடைக்காடர், ஔவையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன

திருவள்ளுவர் கிமு 31 ஆம் நூற்றாண்டில் சென்னை மயிலாப்பூர் அல்லது மதுரையில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.இதனை கொண்டே தமிழ் ஆண்டுகள் கணக்கிடப் படுகிறது. ஆங்கில ஆண்டு கிபி 2050 எனில் திருவள்ளுவர் ஆண்டு 2081 ஆக இருக்கும்.

திருக்குறளை மட்டுமே இவர் இயற்றியதாக கூறப் படும் அதே வேளையில் ஞான வெட்டியான்,பஞ்ச ரத்தினம் போன்ற மருத்துவ நூல்களையும் இவர் எழுதியாதாக கூறப் படுகிறது.

கடைச் சங்க காலமான கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு,மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது

சிறப்பு பெயர்கள்

மாதனுபோதங்கி நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர்

திருக்குறளின் வேறு பெயர்கள்

உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல்

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பதின்மர்( பத்துபேர்)

தருமர், மனக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி,  பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிபெருமாள், காலிங்கர்.

இவர்கள் உரையில் பரிமேலழகர் உரை சிறந்தது ஆகும்.

சென்ற ஆண்டு கூட கீழ் கந்தவர்களுள் யார் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை என கேள்வி வந்திருந்ததாக நினைவு.

இவர்களை தவிர தற்காலத்தில் குரளோவியம் என கலைஞரும், சாலமன் பாப்பையாவும் ,இன்னும் சிலரும் உரை எழுதி உள்ளார்கள்.இவர்கள் உரையில் மு.வ வின் உரை சிறந்தது.

நூல் குறிப்பு

மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை திருக்குறள்.

திருக்குறள் குறள் வெண்பாக்களால் ஆனது . 107 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. திருக்குறளில் 133 அதிகாரங்களும்,1330 குறளும், 9இயல்களும் உள்ளன. திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

திருக்குறளில் "பாயிரம்" என்னும் இயலில் நான்கு அதிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். அதைத்தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்" அடுத்து 14 அதிகாரங்ள் கொண்ட துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 34 அதிகாரங்கள்.

அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன.அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்

திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளும் ஒன்று. நீதி நூல்களுள் தலையாய நூல் திருக்குறள்.பத்து பாட்டும் எட்டுத் தொகையும் சேர்ந்தது பதினென்மேற்கனக்கு நூல்கள்.

சிறப்புகள்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-பாரதி

வள்ளுவனை பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே-பாரதிதாசன்.

கடுகை துளைத்தேழ் கடலை புகட்டி
குறுகத் தரித்த குறள்-இடைக்காடார்

அணுவை துளைத்தேழ் கடலை புகட்டி
குறுகத் தரித்த குறள்- ஔவையார்

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்=நால்வழி (அவ்வையார்)

தமிழ் அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த வெள்ளித் தட்டு.திருக்குறள் அதில் வைக்கப் பட்டுள்ள தங்க ஆப்பிள்.தமிழ் என்னை ஈர்த்தது,குரளோ என்னை இழுத்தது.-டாக்டர் கிரௌல்

இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற பல காலனி நாடுகளை ஆட்சி செய்த ராணி விக்டோரியா மகாராணி காலையில் எழுந்ததும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள்.

1976 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது சென்னை நுங்கம் பாக்கத்திலிலுள்ள வள்ளுவர் கோட்டம் டாக்டர் கணபதி ஸ்தபதி அவர்களால் கட்டி முடிக்கப் பட்டு, திரு கருணாநிதியால் திறந்து வைக்கப் பட்டது.

2000 ஆண்டு அதே கணபதி ஸ்தபதியால் 133 அடி உயர வள்ளுவர் சிலை கட்டி முடிக்கப் பட்டது.

2010 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் திறக்கப்பட்டது. அதற்கு ஈடாக தமிழகத்தில் சர்வக்ஞனா எனற கன்னட மொழி புல்;அவரின் சிலை சென்னை ஜீவா பூங்காவில் திறக்கப் பட்டுள்ளது.(வள்ளுவனுக்கு இணையானவரா சர்வக்ஞனா?)

ரஷ்யாவிலுள்ள கிராம்ளின் என்ற அணுகுண்டு துளைக்காத மாளிகையில் திருக்குறள் பாதுகாக்கப் பட்டுள்ளது.
இங்கிலாந்து காட்சி சாலையில் விவிலியத்தோடு( bible) திருக்குறளும் வைக்கப் பட்டுள்ளது.

வீரமாமுனிவர் லத்தீன் மொழியிலும், ஜி.யு போப் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து உள்ளார்கள்.
நம் திருக்குறள் உலகிலுள்ள 107 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
உலகத்தில் விவிலியத்திற்கு (bible) அடுத்த படியாக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் தான்.

இத்தகைய தெய்வத் தன்மை பொருந்திய வள்ளுவனை முதன் முதலில் இப்படிதான் வள்ளுவன் இருந்து இருப்பான் என ஓவியமாக வரைந்தவர் யார் தெரியுமா? k.r வேணுகோபால் சர்மா.

இந்த குறிப்புகளோடு உங்களின் குறிப்புகளும் வரவேற்கப் படுகின்றன.

அன்புடன்
மணியரசன்( maniyarasan1050@gmail.com)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி