புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. இதற்கு 19.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. இதற்கு 19.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) புதுச்சேரியில் உள்ளது. நாட்டின் மிக உயர்ந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 இடங்கள் உள்ளன. இதற்கு தனி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசு நிறுவனம் என்பதால் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) உரிய இடஒதுக்கீடுகள் உண்டு. வரும் கல்வியாண்டுக்கான (2014-15) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மர் கல்வி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் படித்தவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதியுடையவர். இதற்கான நுழைவுத்தேர்வு புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்பட நாடு முழுவதும் 36 மையங்களில் வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெறுகிறது. 


எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் ஜிப்மர் இணையதளத்தில் (www.jipmer.edu.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 2. அன்று மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப் பிக்கப்பட வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி