300 ஆண்டுகளின் கிழமைகளை சொல்லும் 5-ஆம் வகுப்பு மாணவன்


சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவன் 300 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறுகிறார்.

சென்னை வேளச்சேரி நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம் பாலாஜி (12). இவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திர வித்யாலயத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 1900-ஆம்ஆண்டு முதல் 2200-ஆம் ஆண்டு வரையுள்ள நாள்களின் கிழமைகளை பார்க்காமல் சொல்கிறார்.

இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீராம்பாலாஜியின் தந்தை வேலுச்சாமி கூறியது:

ஸ்ரீராம் பாலாஜி கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முயற்சியில்ஈடுபட்டு வருகிறான். அவனுக்கு இந்தத் திறமை இருப்பது கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பரில் எங்களுக்கு தெரியவந்தது. அப்போது 2000-ஆம் ஆண்டு முதல் 2038-ஆம் ஆண்டு வரையுள்ள 38 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறினான். பின்னர்,கடந்த 2013-ஆம் ஆண்டு 200 (1900-2100) ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொன்னான். தற்போது 300 (1900-2200) ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொல்கிறான் என்றார்.

ஸ்ரீராம் பாலாஜி கூறுகையில், "செல்போனில் உள்ள காலண்டரைப்பார்த்து தேதிகளுக்கான கிழமைகளை கற்றுக் கொண்டேன். தினமும் 3 மணி நேரம் வரை செல்போனில் உள்ள காலண்டர் பார்ப்பேன். தற்போது 300 ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொல்வேன்' என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி