பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் தினமும் 1,250 பேர் கலந்துகொள்கிறார்கள். 31-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடியும்.

விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 1-ல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தகுதித்தேர்வின் 2-வது தாளில் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) 28 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி