வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 25- ஆம் தேதி கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு நாள்களே உள்ளன. வரும் 25- ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக, கடந்த 9- ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில், 9.95 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர்.


இப்போது, வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.விண்ணப்பங்களை பெற்று அளிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 25 ஆகும். இதற்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் யாரும் பெயர்களைச் சேர்க்க முடியாது.


மொபைல் போன் சேவை: வாக்குக்கு பணம் அளிப்பது தொடர்பான புகார்களை புகைப்படம் மற்றும் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை மொபைல் போன் மூலமே அனுப்பும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. வரும் சனிக்கிழமை இந்தப் புதிய வசதியை தமிழக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி அஜய் யாதவ் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி