1 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள் எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு நாளை தொடங்குகிறது

எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு டான்செட் நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 1 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள்.

டான்செட் நுழைவுத்தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு நாளையும் (சனிக்கிழமை) நாளை மறு நாளும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை, சிதம்பரம் உள்பட 15 நகரங்களில் நடக்கிறது. எம்.சி.ஏ. படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்பிற்கு நுழைவுத்தேர்வு நாளை பிற்பகல் 2–30 மணி முதல் மாலை 4–30 மணி வரையிலும் நடக்கிறது.

எம்.இ., எம்.டெக்., எம்.பிளாண்., எம்.ஆர்க். ஆகிய படிப்பில் சேர நுழைவுத்தேர்வு 23–ந்தேதி (நாளைமறுநாள்) காலை 10 மணி முதல் 12 மணிவரை நடக்கிறது.

1 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

இந்த தேர்வுகள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி முதலிய இடங்களில் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எம்.பி.ஏ. படிப்பில் சேர 32 ஆயிரத்து 684 பேர்களும், எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு 13 ஆயிரத்து 817 பேர்களும், எம்.இ. படிப்பில் சேர 50 ஆயிரத்து 16 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தத்தில் இந்த தேர்வை 96 ஆயிரத்து 517 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். ஏறத்தாழ 1 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
தேர்வு முடிந்து முடிவு வெளியிட்ட பிறகு எம்.இ. படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்பகல்வி இயக்குனரகம் நடத்த உள்ளது. நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை இயக்குனர் பேராசிரியர் நாகராஜன், நுழைவுத்தேர்வு இயக்குனர் பேராசிரியர் ராஜேந்திர பூபதி ஆகியோர் செய்து வருகிறார்கள். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி