அன்பு மிக்க ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். கற்றலை தரமானதாக்கும் வீடியோ வடிவிலான பாடங்கள் அடங்கிய குறுந்தகடு வாங்க பெரும்பாலான ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப இந்த குறுந்தகடுகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. இந்த குறுந்தகடுகளை வாங்க விரும்புவோர் 9791440155 என்ற எண்ணிற்கு தங்கள் பெயர் மற்றும் முகவரியை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினால் அடுத்த நாளே இந்த குறுந்தகடுகள் குரியர் மூலம் அனுப்பப்படும். குரியரில் குறுந்தகடுகளை பெற்றுக் கொண்டவுடன், ஆசிரியர்கள் அதற்கான தொகையை மணியார்டர் மூலம் அனுப்பலாம், என இந்த குறுந்தகடை தயாரித்த ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள் நம்மிடம் தெரிவித்தார். இந்த குறுந்தகட்டை பார்த்த மாவட்ட மற்றும் மாநில அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் 'இது ஒரு நல்ல முயற்சி' என பாராட்டு தெரிவித்ததாகவும் கூறினார். இந்த குறுந்தகடு தயாரித்ததற்காக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் இவருக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறினார்.இந்த குறுந்தகட்டில், ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளை தனது இணையதளத்தில் வெளியிடும் ஆசிரியை திருமதி.சித்ரா குமரேசன் அவர்களும் சில பாடல்களை பாடியுள்ளதாகவும் தெரிவித்தார். ஆசிரியை திருமதி.சித்ரா குமரேசன் அவர்களின் இணையதளம் http://teachmicroinnovative.wikispaces.com/ பள்ளிக்கல்வி துறையின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.இந்த குறுந்தகடு பற்றிய தகவலை ஆசிரியப் பெருமக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து கல்விசார் இணைய தளங்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இந்த குறுந்தகடு பற்றிய கருத்துக்களை மேற்கண்ட தொலைபேசியில் ஆசிரியர்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்