எலும்பை இரும்பாக்கும் பிரண்டை!


எலும்பை இரும்பாக்கும், 'கால்சியம்' எனும் சுண்ணாம்புச்சத்து, பிரண்டையில் அதிகம் இருப்பதாக கூறும், சிற்பி: பிரண்டை, கொடி வகையை சார்ந்த மூலிகை; காடுகளில் தானாக வளரக்கூடியது. இது, உலகம் முழுவதும் உள்ள வயதானவர்களை, வாட்டி வதைத்துக் கொண்டிருக்க கூடிய, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத எலும்பு உதிர்வு நோயான, 'ஆஸ்ட்ரியோபோரசிஸ்'சுக்கு கைகண்ட மருந்து.வயதான காலத்தில், சிலருக்கு எலும்பு கொஞ்சம் உருகிக் காட்சியளிக்கும்; அதாவது, மெலிதாகிவிடும். எலும்பின் உட்பகுதி திடமின்மையாகிவிடும். அதனால், கீழே சிறிதாக தடுக்கி விழுந்தாலும் கூட, எலும்பு உடைந்து விடும். இந்நிலைக்கு, அவர்களது எலும்பு பலம் இழந்து காணப்படுவதே காரணம்.இக்குறையை நீக்க, செயற்கையான கால்சியம் மாத்திரைகளை தான், உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பர். செயற்கையாக தயாரிக்கப்படும் மாத்திரைகளை உட்கொள்வதால், 'சைட்எபெக்ட்' எனும் ஒவ்வாமை வரவும், வாய்ப்புகள் அதிகம். எனவே, பிரண்டை கொடியை சமையலில் சேர்த்தால், நம் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மட்டுமின்றி, இளைய பிள்ளைகளுக்கும், இந்த நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.பிரண்டையை, துவையலாக செய்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும், உணவை விரும்பி அதிகம் சாப்பிடுவர். பிரண்டையில், 'கால்சியம் ஆக்ஸலேட்' அதிக அளவில் உள்ளது. அதனால், வாரத்துக்கு இரண்டு முறை நாமும் உட்கொண்டு, குழந்தைகளுக்கும் கொடுத்து வருவோமானால், நம் உடலுக்கு தேவையான இயற்கையான சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.எனவே, பிரண்டையை அதிக அளவில் உண்பதால், எத்தனை வயதானாலும் நம் எலும்பு இரும்பு போல் உறுதியாக இருக்கும். மேலும், பிரண்டை வயிற்றுக் கோளாறுகளான பசியின்மை, செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும்.பிரண்டையை, துவையலாக மட்டுமே செய்து சாப்பிடுவது நல்லது. பிஞ்சுப் பிரண்டையாக இருந்தால், சமைப்பதற்கு எளிதாக இருக்கும். கொஞ்சம் முற்றியதாக இருந்தால், அதை சுத்தப்படுத்தி தோல் மற்றும் கணுக்களை சீவி எடுத்துவிட்டு பயன்படுத்தலாம்.சிறு சிறு துண்டுகளாக பிரண்டையை நறுக்கி எடுத்து, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கினால், மிகவும் நல்லது. இதனுடன், பொதுவாக துவையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சி, பூண்டு போன்றவைகளை போட்டும் சமைக்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி