எந்த நாள்களில் குறிப்பிட்ட நல்ல செயல்களைச் செய்யலாம்?

நாள் நட்சத்திரம் பார்த்துச் செய்தால் நல்லதே நடக்கும் என்பார்கள். அந்த அந்த நட்சத்திர நாளில் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்தால் நன்மையே கிட்டும். அந்த விவரம்:


ஏர் உழ:
அனுஷம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, ரோகிணி, அவிட்டம், மகம், அசுவனி, உத்திரம், உத்திராடம், உத்திராட்டாதி, ரேவதி, மூலம், ஆகிய நட்சத்திரங்கள்.
ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் பூமியில் ஏர் உழுவதற்கு ஆரம்பம் செய்ய உத்தமம். திங்கள் மத்யமம்.
ப்ரதமை, அமாவாஸ்யை, வைத்ருதி, வ்யாகாதம், வ்யதீவாதம் ஆகிய யோகங்கள், பத்ர கரணம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்றைய சுபதினங்களில் ஏர் உழ ஆரம்பித்தல் நலம்.

பயிர் செய்ய:
விசாகம், ஹஸ்தம், ம்ருகசீர்ஷம், மகம், புனர்வசு, ரோஹிணி, அசுவனி, திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி,
மூலம், ரேவதி, சுவாதி, அனுஷம், பூரம் ஆகிய 18 நட்சத்திரங்களில் - செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் ரிஷபம், மீனம், மிதுனம்.

குழந்தையைத் தொட்டிலில் விடுதல்:
உடல் வளர்ச்சிக்கு ஓய்வு அவசியம். குழந்தைகளுக்கு இறைவனாலேயே ஏற்படுத்தப்பட்ட உடற்பயிற்சிதான் கை-கால்களை அசைத்துக் கொள்ளுவது. அவ்வுடற்பயிற்சிக்குப் பின்னர் ஓய்வு கொள்ள கண் வளர வேண்டும். குழந்தைப் பிறந்த 10, 12, 16 மற்றும் 22-ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி சுபகோள்கள் பார்த்த லக்னமும் எட்டாமிடம் சுத்தியும் ஏற்றது.

அரைஞாண் அணிவிப்பது:
வெள்ளி அல்லது பொன் அரை ஞாண் - புண்ணியாஹ வசனம் செய்யும் நாளன்று அல்லது ஐந்தாவது மாதத்தில் கட்டலாம். அவ்வரைஞாணுடன் கருகமணி, செப்புக்காசு, (தொப்புள் கொடி விழுந்ததும் அதனை தாயத்து போன்றும் ஒரு சிலர் அணிவிக்கின்றனர்.) கட்டினால் தோஷங்கள் நீங்கும் எனப் பெரியவர்கள் கூறுவார்கள். சுபதிதிகள், சுபநட்சத்திரங்கள், அஷ்டம் சுத்தியுள்ள சுபலக்னத்தில் அரைஞாண் அணிவித்தால் குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் இருக்கும். எருக்கங்செடியின் நாரினால் அரைஞாண் கட்டினால் குழந்தை அடிக்கடிப் பாலைக்கக்குவது நிற்கும் என பாட்டி வைத்தியமும் கூறுகிறது.

அன்னப்ராஸனம் - அமுதூட்டல்
தாயமுதால் வளரும் குழந்தைக்கு சிறந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பது மரபு. இது 6, 8, 9 அல்லது 12-வது மாதத்தில் அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் த்விதியை, திருதியை பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இதற்கும் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னம் பலம் வாய்ந்ததாக இருந்தல் அவசியம்.

கேச கண்டமென்னும் முடியிறக்குதல்:
நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ, இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. 3 அல்லது 5-ம் ஆண்டு செய்வது வழக்கம். வளர்பிறை மிகவும் ஏற்றது. த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் அஸ்வினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள். திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகள். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். எழில் சூரியன், செவ்வாய் இருக்கக் கூடாது.

கர்ண பூஷணம் - காது குத்துதல்:
ஆக்யூபங்க்சர் என்னும் முறை இன்று மிகவும் பிரபலமாகியுள்ளது. உடல் நலத்துக்கும், வளர்ச்சிக்கும், நோய் நிவாரணத்துக்கும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. எல்லாவற்றிலும் மிகவும் உயர்ந்த நிலையை எட்டிய நமது முன்னோர்கள் இதனைக் கருத்தில் கொண்டே காது குத்தும் நிகழ்ச்சியைக் குழந்தைப் பருவத்திலேயே செய்வித்தனர். 6, 7 அல்லது 8-வது மாதத்தில் பகலில் செய்ய வேண்டும். இரண்டு திதிகள், இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும். மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் த்விதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள். ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருந்தல் அவசியம்.

அட்சராப்யாஸம் - கல்வி புகட்டுதல்:
கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கன்ணெனத் தகும் என்பார். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில் செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அஸ்வினி, ரோகினி, திருவாதிரை-புனர்வசு, பூசம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி,
அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியனவும். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, மிதுனம், கடகம், மகரம், மீனம் ஆகியனவும் ஏற்றது. நான்கு, எட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக் கூடாது. லக்னத்தையும் நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.

நிஸ்சயதார்த்தம் அல்லது நிச்சயதாம்பூலம்:
த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி. ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியன ஏற்றாது.
கேந்திரகோணங்களில் பாவக்கோள்கள் இல்லாத லக்னமாக அமைய வேண்டும்.

திருமாங்கல்யம் செய்ய:
அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், மகம், உத்திராடம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி,
த்விதியை, திருதியை. பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரயோதசி,
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம், இரண்டாமிடம் சுத்தமான லக்னமும் ஏற்றது.

கர்ப்பமான பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து வரல்:
த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி, திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளிலும் பொதுவான சுப நட்சத்திரங்களில்
பெண்ணுக்கு தாராபலமுள்ள நாளில், பிரயாணத்துக்கு உகந்த நாட்களில் வாரசூலை, சுக்கிரன், எதிரில் இல்லாத நாளில் அழைத்து வரல் வேண்டும்.
ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் அழைத்து வர வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் மாமியார் வீட்டுக்கு அனுப்புதல்:
குழந்தைக்கு 3, 5, 7, 9, அல்லது 11-வது மாதத்தில் அனுப்பலாம். மூன்றாவது அல்லது ஐந்தாவது மாதம் அனுப்புதல் சிறந்தது.
துவிதியை, திருதியை, சதுர்த்தி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, திதிகள்,
அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி,
குழந்தை-தாய் இருவருக்கும் தாராபலமுள்ள நாட்கள் ஏற்றன.
ஆனந்தாதி யோகப்படி நல்ல நாள் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.

கிணறு வெட்டும் திசையின் பலன்:
வீடுக்கு கிழக்கு - விபத்து, தென்கிழக்கு - புத்திர நாசம், தெற்கு - மனைவிக்குப் பீடை, கெண்டம். தென்மேற்கு - எஜமானனுக்கு ஆபத்து, மேற்கு - உடல் ஆரோக்கியம், வடமேற்கு - ஆயுத பயம், வடக்கு - செல்வம் சேரும். வடகிழக்கு - சுபீட்சமான வாழ்வு. நல்ல நாட்கள்

Source : http://www.dinamani.com/astrology/article1295076.ece

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி