காமராசர் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் 2013 நவம்பரில் நடைபெற்ற அல்-பருவமுறை இளநிலை, முதுநிலை பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிஏ சமூக அறிவியல், பிஏ அரசியல் அறிவியல், எம்பில் படிப்பில் ஊடகவியலும் வெகுசன தொடர்பியலும், சமூக அறிவியல், தொழில்முனைவோர், சமூகவியல், வணிகவியல், ஹிந்தி, எம்ஏ படிப்பில் காந்தியம், தத்துவம் மற்றும் மதம், ஹிந்தி, சமூகவியல், நூலகப்படிப்பில் சான்றிதழ், பட்டயம் ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.
மாணவர்கள், தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளம் www.mkudde.org என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டுதல் விண்ணப்பத்தை மேற்கண்ட இணையதளம் முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். மதிப்பெண் பட்டியில் வரை காத்திராமல் உடனடியாக மறுகூட்டுதல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையர் கே.சின்னசாமி தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி