பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க மனப்பாடப்பகுதி பாடல்கள் இனிமையான இசை மற்றும் ராகத்தில் பாடப்பட்டு ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க பள்ளிக்கல்வித்துறை புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, மனப்பாடப்பகுதி பாடல்கள் இனிமையான இசை மற்றும் ராகத்தில் பாடப்பட்டு ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. 


மாணவர்களின் நாடித் துடிப்பை தெரிந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் வழியிலே சென்று மனப்பாடப்பகுதி பாடல்களை எளிதாக படிக்கவும் நினைவில் வைக்கவும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மனப் பாடப்பகுதியில் சரியாக பதில் அளித்தால் முழு மதிப்பெண் பெற்று விடலாம் என்று மாணவ-மாணவிகளுக்கு குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அடிக்கடி அறிவுரை கூறுவது வழக்கம். 

இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்கும் வகையில் அந்த பாடல்கள் இனிய இசையில் ரசித்துக் கேட்கத் தூண்டும் ராகத்தில் ஆடியோ சி.டி.யாக உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.) உதவியுடன் மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் இந்த சி.டி.யை தயாரித்துள்ளது. 

இசையில் அரசு பள்ளி இசை ஆசிரியர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த பாடல்களை பாடியுள்ளனர். 

34 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆடியோ சி.டியை தயாரித்து ஆர்.எம்.எஸ்.ஏ.விடம் ஒப்படைத்துள்ளது. 

இதில், தமிழ் பாடத்தில் திருக்குறள், திருவாசகம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், பெரியபுராணம், நாலாயிரத் திவ்யபிரபந்தம், சீறாப்புராணம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து 14 மனப்பாடப்பகுதி பாடல் களும், அதேபோல், ஆங்கில பாடத்தில் 4 மனப்பாட பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி