துணை ராணுவ வீரர் தேர்வு முறையில் வருது மாற்றம்

துணை ராணுவப்படைக்கு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு முறையில், அதிநவீன அறிவியல் மற்றும் கண்காணிப்பு முறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு இணையாக, துணை ராணுவத்தினருக்கும் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை, "சஷஸ்த்ர சீமா பல்" போன்ற துணை ராணுவப் படைகளுக்கு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வில் நவீன முறைகளை பின்பற்ற, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தேர்வு முறை முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வினாத் தாள்கள், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்யும் வகையில், "ஆப்டிக்கல் மார்க் ரீடர்" மற்றும் "ஆப்டிக்கல் கேரக்டர் ரெகக்னிஷன்" தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட உள்ளன. மேலும், "ரேடியோ பிரீக்வன்சி ஐடென்டிபிகேஷன்" எனப்படும் முறையில் தேர்வுக்கு வரும் வீரர்கள் வினாத் தாள்கள், விடைத் தாள்கள், ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணிக்கப்படும். இந்த தகவலை உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி