"செவ்வாய்" முதல் பாரத ரத்னா வரை... ராவ் கடந்து வந்த பாதை


* பெங்களூருவில் 1934ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி சி.என்.ஆர்.ராவ் பிறந்தார். இவரது முழுப்பெயர் சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பல்கலையில் விரிவுரையாளராக பணியைத் துவக்கினார். வேதியியல் துறை பேராசிரியர். பின் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் வேதியியல் துறைத் தலைவர் பதவி வகித்தார்.

* இவர் பிரதமரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக உள்ளார். "இன்டர்நேஷனல் சென்டர் பார் மெட்டீரியல் சயின்ஸ்&'சின் (ஐ.சி.எம்.எஸ்.,) இயக்குனராகவும் பதவி வகிக்கிறார். செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய "மங்கள்யான்&' விண்கல திட்டத்தில் பங்கு வகித்தார். கவுரவ வெளிநாட்டு உறுப்பினராக, சீன அறிவியல் கழகம் இவரை தேர்வு செய்தது.

* இவரது தந்தை ஹனுமந்த நாகேச ராவ். தாயார் நாகம்மா நாகேச ராவ். சி.என்.ஆர்.ராவ், இளநிலை பட்டத்தை மைசூரு பல்கலையிலும், முதுநிலை பட்டத்தை பனாரஸ் இந்து பல்கலையிலும் பெற்றார். 1958ம் ஆண்டு அமெரிக்க பல்கலையில் பிஎச்.டி., பட்டம் பெற்றார்.

* உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளன. இவர் 45 புத்தகங்களையும், 1,500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

* உலக அளவில் பல அறிவியல் விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசு ஏற்கனவே பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளை வழங்கியுள்ளது. அறிவியல் துறையில் இவரது சாதனையை பாராட்டி 2013, நவ.16ல் &'&'பாரத ரத்னா&'&' விருது அறிவிக்கப்பட்டது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி