தமிழக பள்ளிக் கல்வித் துறையில், நூலகத் துறை இயக்குனர், 3 இணை இயக்குனர், 22 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன. பொதுவாக, பணி மூப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு, பதவி உயர்வு அளித்து, அறிவிப்பு வெளியாகும். கடந்தாண்டு முதல், பணி மூப்பு பட்டியலில் உள்ளவர்களின் வீட்டுக்கு, 'உத்தரவுகள்' அனுப்பப்படுகின்றன. 'இந்த நடைமுறை மாறவேண்டும்; பதவி உயர்வு அறிவிப்பில், வெளிப்படை தன்மை வேண்டும்' என, கல்வி அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.