'அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமியுங்க!': தவறிய மழையால் தடுமாறும் நீராதாரம்...

''தண்ணீர் தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப, நீரை சேமித்து மிச்சப்படுத்தும் பட்சத்தில், அடுத்த தலைமுறைக்கு, குறைந்தளவாவது தண்ணீரை விட்டுச் செல்ல முடியும்,'' என, ஊராட்சிகளில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்து வரும் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.


தவறிப் போகும் பருவமழை; மறைந்து போகும் நீராதார சுவடுகளால், இன்றைக்கு தண்ணீரின் அருமையை பெரும்பாலானோர் உணரத் துவங்கி விட்ட்னர். கிடைக்கும் சொச்ச நீரையாவது சேமித்து வைத்தால் மட்டுமே, நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, ஊராட்சிகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.தண்ணீரின் முக்கியத்துவம், நீர் மேலாண்மை, நீரை எவ்வாறு கிடைக்கச் செய்வது, கிடைக்கும் நீரையும் எவ்வாறு பாதுகாப்பது என்பன உட்பட வழிமுறைகள் கற்றுத் தரப்படுகின்றன.


கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, சிறப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளராக, 'எய்ம்' தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை, கோவை ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள ஊராட்சிகளில், சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் வழிகாட்டுதல்படி, கோவை ஊராட்சிகளில் உள்ள கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், ஊராட்சித் தலைவர், செயலாளர், பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியை, கிராம சவெ?லியர், அங்கன்வாடி பணியாளர், குடிநீர் பணியாளர்கள் இருப்பர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றுவது இவர்களது கடமை.பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு கூறுகையில், ''கிராமந்தோறும் நடத்தி வரும் பயிற்சியில், பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற்றுள்ளனர். உற்பத்தி செய்ய முடியாத நீரை, எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துகிறோமே, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. வருங்கால சந்ததிக்கு, குறைந்த அளவாவது, தண்ணீரை விட்டுச் செல்ல முடியும்,'' என்றார்.


தவறிப் போகும் பருவமழை; மறைந்து போகும் நீராதார சுவடுகளால், இன்றைக்கு தண்ணீரின் அருமையை பெரும்பாலானோர் உணரத் துவங்கி விட்ட்னர். கிடைக்கும் சொச்ச நீரையாவது சேமித்து வைத்தால் மட்டுமே, நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, ஊராட்சிகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி