மும்பை: இந்திய திருநாட்டில் மோனோ ரயில் இயக்கப்படும் முதல் மாநிலம் மகாராஷ்ட்டிரா என்ற பெருமையை பெற்றுள்ளது. குறிப்பாக வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று எதிர்கட்சிகளால் குறை கூறும் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இந்த பெருமை மிகு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குளு, குளு வசதி கொண்ட இந்த ரயிலில் சொகுசுடன் , நினைத்த இடத்தை விரைவில் சென்றடையும் வாய்ப்பு மும்பை மக்களுக்கு கிடைத்துள்ளது.
15 நிமிடத்திற்கு ஒரு முறை : மும்பையில் கே.எம்.வாட்லா- செம்பூர் வரை 8. 9 கிலே மீட்டர் தூரம் செல்லும் இந்த ரயிலில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ரூ. 6 முதல் 11 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு ரயிலில் இதில் 560 பேர் வரை வரை ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். நகரின் முக்கிய ரயில் நிலையங்களை இது இணைக்கும். காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை ரயில்கள் வந்து செல்லும். ஒரு மணி நேரத்தில் 80 கி,மீட்டர் தூரம் செல்லும். சராசரியா 65 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த திட்டம் வெற்றி தொடர்வதை அடுத்து இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவிருக்கிறது.