ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கேட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
பழனிமுத்து, கருப்பையா, ரமேஷ் உள்ளிட்டோர் இதுதொடர்பாக மனு தாக்கல் தெய்திருந்தனர். தேசிய ஆசிரியர் கல்வி வாரிய விதிகளின்படி மதிப்பெண்ணில் சலுகை கோரி அவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் சலுகை வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.